சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நாளை மறுநாள் சனிக்கிழமை (29-01-2022) முதல் வேட்புனுக்களை தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடசென்னையில் ஒட்டப்பட்டுள்ள கட்சி போஸ்டர்கள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.