சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை செயலகத்தில் சந்தித்தார்.
அப்போது, “தமிழ்நாடு அரசுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் ( டிட்கோ ) சார்பில் 77 கோடியே 93 இலட்சத்து 33 ஆயிரத்து 18 ரூபாய்க்கான காசோலையும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் ( சிப்காட் ) சார்பில் இடைக்கால ஈவுத் தொகையாக 70 கோடி ரூபாய்க்கான காசோலையும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் 7 கோடியே 33 இலட்சத்து 34 ஆயிரத்து 700 ரூபாய்க்கான வங்கி வரைவோலையையும் வழங்கினார்.