இதுகுறித்து அச்சங்கத் தலைவர் ஜெயலால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய மருத்துவ சங்கம், பல்வேறு ஆய்வு அறிக்கைகள், விஞ்ஞானரீதியான புள்ளி விபரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அரசின் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் தனாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் திறன் வாய்ந்தது என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டும்.
கோவாக்சின் என்ற தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமும், கோவிஷீல்ட் என்ற தடுப்பூசியை இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனமும் தயாரித்துள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் மிகவும் பாதுகாப்பானவை எனவும், இந்திய தட்ப வெட்ப அமைப்பிற்கு ஏற்றவை எனவும், நோய் எதிர்ப்பு அணுக்களை சிறந்த முறையில் உண்டாகின்றன எனவும் கண்டறியப்பட்டுள்ளது.