தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு! - அலோபதி மருத்துவம்

ஆயுர்வேத மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகம்
ஆயுஷ் அமைச்சகம்

By

Published : Nov 24, 2020, 8:43 PM IST

சென்னை : இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ராஜா, மாநிலச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்திய மருத்துவ முறைக்கான மத்திய மருத்துவக் கழகத்தின் நம்பகத்தன்மை மற்றும் மேலாதிக்கம் மீது, நாட்டின் ஒட்டு மொத்த மருத்துவமுறையும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளது. காரணம், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆயுர்வேதா மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடர்பான அறிவிப்பாகும்.

நவீன ஆங்கில மருத்துவத்தின் கீழ் வருகின்ற, அலோபதி மருத்துவரால் மட்டும் செய்யக்கூடிய பல்வேறு அறுவை சிகிச்சைகளை, இனி ஆயுர்வேதம் படிக்கின்ற மருத்துவர்களும் செய்யலாம், அவர்களுக்கும் எம்.எஸ். பட்டம் வழங்கப்படும் என்று 'ஆயுஷ்' அமைச்சகம் அறிவித்துள்ளது. மருத்துவ நுட்பவியல் சொற்கள் எல்லாம் காலம் காலமாக இருந்து வரும் பொதுவான சொற்கள் தான் என்ற காரணம் சொல்லப்படுகிறது. இவ்வாறு ஒரு மருத்துவ முறையோடு இன்னொரு மருத்துவ முறை கலப்பதை இந்திய மருத்துவ சங்கம் எதிர்க்கிறது.

ஒரே நாடு - ஒரே மருத்துவமுறை என்ற கொள்கையும் நாட்டிலுள்ள, 600 மருத்துவ கழகத்திலும், 2030க்குள் கலப்பு முறை மருத்துவர்களும் 'கிச்சடி' மருத்துவ முறையும் உருவாவதை மருத்துவ தொழிலின் சிக்கலாக மட்டும் பார்க்காமல், நாட்டின் மருத்துவத்துறையின் சிக்கலாகவும், நாட்டு மக்களின் நலனுக்கு எதிரானதாகவும் பார்க்கிறோம். நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளை கட்டிக்காக்கும் நிலைப்பாட்டுக்கும், அதற்காக 'ஆயுஷ்' அமைச்சகம் அளித்துவரும் உறுதிபாட்டிற்கும் எதிரான முடிவாக கருதுகிறோம்.

ஆயுர்வேத மருத்துவர் அறுவை மருத்துவம் செய்யலாம் என்றால், மயக்க மருந்தும் செயல்முறையும் ஆயுர்வேதத்தில் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. நுண்ணுயிர் தொற்று என்பதில் நம்பிக்கை இல்லாத ஆயுஷ் மருத்துவம் எந்த மருந்தைக் கொடுத்து தொற்றைக் கட்டுப்படுத்தும். எனவே ஆயுர்வேத மருத்துவர்கள் நவீன அலோபதி மருத்துவர்களின் துணை இன்றி எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்ய இயலாது என்பது புலனாகும்.

நாம் பாரம்பரியம் என்று எதையோ தவறாக புரிந்து வைத்திருப்பதும் விளைவு தான், இது போன்ற அறிவிப்புகளாகும். நவீன மருத்துவ தடுப்பூசி மூலம் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தி வருகிறோம். காச நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த மருத்துவத்தை மக்களுக்கு அறிவிப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

நீண்ட காலம் பாடுபட்டு கட்டியெழுப்பியுள்ள மருத்துவத்துறையின் உன்னதத்தை பாதுகாக்கும் கடமை இந்திய மருத்துவ சங்கத்திற்கு உள்ளதால், மத்திய செயற்குழு ஓர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது. 28 மாநில மருத்துவ சங்க கிளைகளும் செயற்குழுவைக் கூட்டும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அதில் கூறிப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவரின் வாரிசுக்கு அரசு வேலை - பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details