தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் - BSNL

இந்தியன் வங்கிக்கு போட்டி கட்டணத்தில் தடையற்ற தொலைதொடர்பு சேவைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் வகையில் இந்தியன் வங்கியும், பிஎஸ்என்எல் நிறுவனமும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.

சென்னை
சென்னை

By

Published : Apr 27, 2021, 8:37 PM IST

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியும், பொதுத் துறை தொலைதொடர்புத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும், இந்தியன் வங்கிக்கு போட்டி கட்டணத்தில் தடையற்ற தொலைதொடர்பு சேவைகளை வழங்க இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர், பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் முன்னிலையில் இன்று (ஏப். 27) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நவீன நெட்வொர்க் தொழில்நுட்பங்கள், முன்னணி சேவைகளைப் போட்டி விலையில் இந்தியன் வங்கி பெறமுடியும்.

நாடு முழுவதும் தனது நெட்வொர்க்குக்கு பிஎஸ்என்எல், மாநகர் டெலிபோன் நிகாம் நிறுவன சேவைகளை இந்தியன் வங்கி பயன்படுத்திவருகிறது.

இது குறித்து, சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் வி.கே. சஞ்சீவி கூறுகையில், "நாடு முழுவதும் இந்தியன் வங்கியின் 5000 கிளைகள், ஏடிஎம் இயந்திரங்கள், சமீபத்தில் இணைக்கப்பட்ட அலகாபாத் வங்கி ஆகியவற்றை பிஎஸ்என்எல், அதன் துணை நிறுவனமான எம்டிஎன்எல் ஆகியவை தங்களின் தொலைதொடர்பு கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இணைக்கிறது" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details