தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுதந்திர தினம்; காவலர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிப்பு

CM AWARD டேவிட்சன் தேவாசீர்வாதம் காவலர்களுக்கு பதக்கம் சுதந்திர தினம் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின பதக்கம் Independence Day TN Governments Announcement of special medals for the Police officers special medals Police officers Edapadi Palaniswamy
CM AWARD டேவிட்சன் தேவாசீர்வாதம் காவலர்களுக்கு பதக்கம் சுதந்திர தினம் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின பதக்கம் Independence Day TN Governments Announcement of special medals for the Police officers special medals Police officers Edapadi Palaniswamy

By

Published : Aug 14, 2020, 11:16 AM IST

Updated : Aug 14, 2020, 2:02 PM IST

11:12 August 14

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவலர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுச்சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறை அலுவலர்களுக்கு 2020ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

அவர்களின் விவரம் வருமாறு:-

எண் காவல் அலுவலர் பெயர் பதவி பணியிடம்
01 டேவிட்சன் தேவாசீர்வாதம் கூடுதல் காவல்துறை இயக்குநர் (தொழில் நுட்பப் பணிகள்) சென்னை
02 கி.சங்கர் காவல்துறை தலைவர் (குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை) சென்னை
03 ச.சரவணன் காவல் துணைஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திருநெல்வேலி மாநகரம்
04 ச.தீபா கணிகர் காவல் கண்காணிப்பாளர் சேலம்
05 பி.ஜெகன்நாத் தலைமை காவலர் (வேலை வாய்ப்பு மோசடி, மத்திய குற்றப்பிரிவு) சென்னை

இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்க்கண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு 2020 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்களை வழங்கிட, முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

அவர்கள் விவரம் வருமாறு:-

எண் காவல் அலுவலர் பெயர் பதவி பணியிடம்
01 ஜி.நாகஜோதி காவல் துணை ஆணையர்,
மத்திய குற்றப்பிரிவு
சென்னை
02 இரா.குமரேசன் காவல் துணை கண்காணிப்பாளர்,
“கியூ” பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, 
சென்னை.
03  தி.சரவணன் காவல் உதவி ஆணையர்,
வடக்கு சரகம்(குற்றம்)
சேலம் மாநகரம்.
04 எஸ்.கே.துரை பாண்டியன்,
 
காவல் துணை கண்காணிப்பாளர்,
காட்பாடி உட்கோட்டம்,
 வேலூர் மாவட்டம்
05 ஈ.இளங்கோவன் ஜென்னிங்ஸ் காவல் ஆய்வாளர்,
ஓருங்கிணைந்த குற்றப்பிரிவு,
குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, 
திருச்சி மாநகரம்
06 பி.எஸ்.சித்ரா
 
காவல் ஆய்வாளர்,
மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம்
திருச்சி மாநகரம்.
07 கா. நீலாதேவி காவல் ஆய்வாளர்,
மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம்,
சிவகங்கை
08 ச.பச்சையம்மாள் காவல் ஆய்வாளர்,
அரக்கோணம் இருப்புப்பாதை காவல் நிலையம்,
இருப்புப்பாதை காவல் சென்னை.
09 ப.உலகராணி காவல் ஆய்வாளர்,
குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை
திருநெல்வேலி
10 பி.விஜயலட்சுமி காவல் ஆய்வாளர்,
அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு,
திருநெல்வேலி

இந்த விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ பாடுபட வேண்டும்'- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து!

Last Updated : Aug 14, 2020, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details