தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புறநகர் ரயில் சேவை அதிகரிப்பு - rail service

சென்னை: விடுமுறை நாள்களில் 401 புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

புறநகர் ரயில் சேவை
புறநகர் ரயில் சேவை

By

Published : Jan 8, 2021, 8:06 PM IST

கரோனா ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுவருகிறது. புறநகர் ரயில் சேவை வரும் 10ஆம் தேதிமுதல், தேசிய விடுமுறை நாடள்களில் 401 புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 26ஆம் தேதிவரை வார நாள்களில் மொத்தம் 410 ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது வார நாள்களில் 500 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், வரும் 10ஆம் தேதிமுதல் ஞாயிற்றுக்கிழமை, தேசிய விடுமுறை நாள்களில் 401 புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, பின்வரும் வழித்தடங்களில் ரயில் சேவை இயக்கப்படும் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம்
எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் - அரக்கோணம் மார்க்கத்தில் 147 சேவைகள்
எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 66 சேவைகள்
எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் 136 சேவைகள்
எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் - வேளச்சேரி மார்க்கத்தில் 52 சேவைகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே அனைத்து தேசிய விடுமுறை நாள்களிலும் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details