சென்னையில் இயங்கி வரும் இரண்டு தனியார் நிதி நிறுவனங்களில் வரிஏய்ப்பு செய்துவருவதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில், வருமான வரித்துறை அலுவலர்கள் இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான 35 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.300 கோடி வரிஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
தனியார் நிதி நிறுவனங்களில் சோதனை - ரூ.9 கோடி பறிமுதல்
சென்னையில் உள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 9 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வருமான வரித்துறை
அத்துடன் ரூ. 9 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வேலூர் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..!