தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Modi Xi meet :சென்னையில் போக்குவரத்துக்கு மீண்டும் தடை! - roads blocked in chennai due to china premier xi jinping visit

சீன அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் சென்னை - கிண்டி திரும்பவுள்ளதையடுத்து மாநகரின் முக்கிய சாலைகளில் மீண்டும் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

roads blocked in chennai

By

Published : Oct 11, 2019, 9:14 PM IST

Modi Xi meet :இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெற்ற கலாஷேத்ரா குழுவினரின் நடன நிகழ்ச்சிகளை இருவரும் கண்டு களித்தனர் .

சீன அதிபர் மீண்டும் கிண்டி ஐடிசி சோழா நட்சத்திர விடுதிக்குத் திரும்பவுள்ளதால் சென்னையில் பல முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூரிலிருந்து மத்தியகையாலஷ் செல்லும் ராஜீவ்காந்தி சாலையில் (பழைய மகாபலிபுரம் சாலை) இருபுறமும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை பகுதியிலும் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. கத்திபாராவிலிருந்து சைதாப்பேட்டை வரையும் சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சைதாப்பேட்டையிலிருந்து வேளச்சேரி செல்லும் சாலையிலும் சைதாப்பேட்டையிலிருந்து மத்திய கைலாஷ் செல்லும் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்துக்கு மீண்டும் தடை!

அதேபோல வேளச்சேரி 100 அடி சாலையிலும் வேளச்சேரி பிரதான சாலையிலும் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக மாநகரின் முக்கியப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details