சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்துக்கு வரவேண்டிய விமானங்கள் நேற்று இரவு பெங்களூரூ உள்ளிட்ட சில முக்கிய நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.
இந்நிலையில், நேற்று துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த இளையராஜா, அவர் பயணிக்க இருந்த ஐக்கிய அமீரகத்தின் எமிரேட்ஸ் விமானம் இரவு 9 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது.
மழையினால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அவ்விமானம் இரவு 9 மணிக்குப் பதிலாக தாமதமாக நள்ளிரவு 2.45 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்பட்டுச்சென்றது.
இரவு 9 மணி விமானத்துக்கு 7 மணிக்கே வந்து காத்திருந்த இளையராஜா, மழையின் காரணமாக விமானம் மேலும் தாமதமானதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லட்சக்கணக்கில் கலப்பட டீசல் விற்பனை... திமுக வார்டு கவுன்சிலரின் கணவர் கைது