சென்னை : நாட்டிலேயே முதல் முறையாக, மெய்நிகர் இன்ஜினீயரிங் மிஷன் கூட்டமைப்பு (Augmented Reality (AR), Virtual Reality (VR), and Mixed Reality (MR) மெட்ராஸ் ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டமைப்பு கல்வி, தொழிற்சாலை மற்றும் அரசு என பல குழுவால் ஒருங்கிணைக்கப்படுகிறது. கூட்டமைப்பின் நோக்கம் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு உதவுவதே ஆகும்.
மணிவண்ணன் பேச்சு
இது குறித்து மெட்ராஸ் ஐஐடி மெக்கானிக்ஸ் துறையை சேர்ந்த பேராசிரியரும் கேவ் (CAVE ) ஒருங்கிணைப்பாளருமான எம். மணிவண்ணன் கூறுகையில், “எக்ஸ்ஆர் மற்றும் ஹாப்டிக்ஸ் (தொடுதிரை) கண்டுபிடிப்புகளுக்கு ஐஐடி மெட்ராஸ் போன்ற வலுவான ஆராய்ச்சி குழு தேவை.
ஒரு கல்வியகம் கூட்டமைப்பைத் தொடங்கியுள்ளதால், கண்டுபிடிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன” என்றார்.
உள்ளங்கையில் கீழடி
இதன் தொடக்க விழாவில் உரையாற்றிய டாக்டர் நீரஜ் மிட்டல், “இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு இத்தகைய கூட்டமைப்பு தேவை. அதாவது இத்தகைய தொழிற்நுட்பம் மூலம் நீங்கள் கீழடி செல்லாமலேயே அதனை நேரடியாக பார்க்காமலே அதன் பாரம்பரியத்தை உணரலாம்” என்றார்.
மெய்நிகர் கூட்டமைப்பின் நோக்கம்
இந்தக் கூட்டமைப்பில் சில சிறப்பம்சங்கள் உள்ளன. அதன்படி, VR/AR/MR மென்பொருள், வன்பொருள் உள்நாட்டில் தயாரிக்கப்படும். இது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உதவியுடன் முன்னெடுக்கப்படும்.
மெய்நிகர் வழிதடங்கள் அமைக்கப்பட்டு, இத்தொழிற்நுட்பத்துக்கான மையமாக திகழ திட்டங்கள் உருவாக்கப்படும். இது குறித்து மாணவ- மாணவியருக்கு பயிற்சி அளிக்க பயிற்சிக் கூடங்கள் உருவாக்கப்படும். இந்த தொழிற்நுட்பத்தை மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்த முன்னெடுக்கப்படும். Augmented Reality (AR) என்பது ஒரு பொருளை நேரில் பார்க்காமலே உணர்வது ஆகும்.
கலந்துகொண்டவர்கள்
இந்நிகழ்வில் நிதி ஆயோக் அடல் கண்டுபிடிப்பு திட்ட இயக்குனர் டாக்டர் சிந்தன் வைஷ்ணவ் மற்றும் அமெரிக்க பேராசிரியர் ஸ்டீவன் எம். லாவல்லே, பேராசிரியர் மண்டயம் சீனிவாசன், லண்டன் ஹெப்டிக்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். வெங்கட் சதானந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : மெக்னீசிய உலோகத்தை பயன்படுத்தி முயலுக்கு எலும்பு முறிவு சிகிக்சை... வெற்றி கண்ட சென்னை ஐஐடி!