சென்னை:டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகளில் கரோனா நோய்த்தொற்று நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து அறிவுரைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கீழ்க்கண்ட நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) மற்றும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன .
முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது - தெளிவான பதில் சொன்ன டாஸ்மாக் நிர்வாகம்
மது வாங்க வரும்போது முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது என டாஸ்மாக் நிர்வாகம் தெளிவாகக் கூறியுள்ளது.
அதில்,
'1. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது .
2. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் .
3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக் கூடாது .
4. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கையுறை, கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்திருக்க வேண்டும்.
5. முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும்.