தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும் தலைமை ஆசிரியர் பணியில் ஏற்படும் காலிப் பணியிடத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு 5 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணி மாறுதல் பெற்றால், இடைநிலை ஆசிரியர் மூலம் நடத்தத் தொடக்கக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்புள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 18ஆம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் ஆசிரியர் நலன், கல்வி நலன், மாணவர் நலன்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை தொடக்கக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் உறவினர் வீட்டில் நகை திருட்டு - காவலாளி கைது!
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 18ஆம் தேதி வருவாய் மாவட்டத்திற்குள் நடைபெற்றது. பின்னர் ஒன்றிய அளவில் ஏற்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு, ஒன்றிய அளவில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்திருந்த தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.
எனவே பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஒன்றிய முன்னுரிமையின்படி தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு தொடக்கக்கல்வி துறை உடனடி அளித்திட வேண்டும். மேலும், 19ஆம் தேதி நடைபெற்ற ஆரம்பப்புள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்பு ஏற்பட்ட ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 5 மாணவர்களுக்குக் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் காலியாக இருந்த தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.