சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணி மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து தஹில் ரமாணி, மேகாலாயா உயர் நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழலில், பணிமாற்ற முடிவை மறுபரிசீலனை செய்ய தலைமை நீதிபதி தஹில் ரமாணி விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது.
இதனால் அதிருப்தியில் ராஜினாமா செய்து, குடியரசு தலைவருக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினார் தஹில் ரமாணியின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள்,முன்னாள் நீதிபதிகள், நீதித்துறையின் முக்கிய பிரமுகர்களிடம் இந்த விவகாரத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பலைகள் தொடர்ந்து நிலவி வந்தது.