தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’ரஜினி அரசியலுக்கு வராததற்கு நானும் ஒரு காரணம்’ - ரஜினி அரசியலுக்கு வரவில்லை

சென்னை: ரஜினி அரசியலுக்கு வரவில்லை என முடிவெடுத்ததற்கு தானும் ஒரு காரணம் என புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

rajini
rajini

By

Published : Jan 16, 2021, 8:09 PM IST

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு வேலப்பன்சாவடியில் புதிய நீதிக் கட்சி சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்களின் தேவைகளை பார்த்து பார்த்து பூர்த்தி செய்தவர் எம்.ஜி.ஆர். வரி இல்லாத ஆட்சி, வரி இல்லாத பட்ஜெட்டை கொண்டு 12 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். எம்.ஜி.ஆர் போன்று யாராலும் இனி ஆட்சி செய்ய முடியாது.

புதிய நீதிக் கட்சி அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்காததற்கு அவரது உடல் நிலை தான் காரணம். அறுவை சிகிச்சை செய்தவர்கள் கரோனா தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து மீள்வது கடினம். ரஜினிக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் அரசியல் கட்சி தொடங்குவதைவிட, உயிரோடு இருப்பது தான் முக்கியம். அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்ததற்கு நானும் ஒரு காரணம்” எனக் கூறினார்.

’ரஜினி அரசியலுக்கு வராததற்கு நானும் ஒரு காரணம்’

இதையும் படிங்க:குருமூர்த்தியின் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தை காட்டுகிறது - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details