தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உயிருக்கு ஆபத்து: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் புகார் - Husband of late actress Chitra complaints in Commissioner Office

மாஃபியா கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு வழங்குமாறு மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் புகார்
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் புகார்

By

Published : Apr 29, 2022, 7:41 AM IST

Updated : Apr 29, 2022, 2:39 PM IST

சென்னை: சின்னத்திரையில் வெளியான பிரபல நாடகங்களில் நடித்து வந்தவர் சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்டோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவரான ஹேமந்த் தான் காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டு பின்னர் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்த் கடந்த 25 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மனைவியான சித்ராவும், தானும் மிகுந்த அன்னியோன்யத்துடன் இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது சின்னத்திரை பிரபலங்கள் அனைவருக்கும் தெரியும்.

தனது மனைவி தற்கொலை செய்துகொண்டபோதே தானும் தனது வாழ்வை முடித்துக்கொள்ள நினைத்தேன். ஆனால் தனது மனைவியை தான்தான் தற்கொலைக்கு தூண்டியதாகசேற்றை வாரியவர்கள் முன் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கவே இன்னும் உயிரோடு உள்ளேன்.

தனது மனைவியின் தற்கொலைக்குப் பின்னால் பண பலமும், அரசியல் பலமும் கொண்ட மாஃபியா கும்பல் இருப்பதும் பலருக்கு தெரிந்த உண்மை. அவர்களுக்கு பயந்து அதை வெளியில் கூற அனைவரும் தயங்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்களின் பண பலத்துக்கு முன்னால் தன்னைபோன்ற சாதாரண மனிதனால் எதுவும் செய்ய இயலாது. அப்படி செய்தாலும் மனைவி தனக்கு திரும்பக் கிடைக்கப்போவதில்லை.

சுப்பா ராவ், சரோஜா ராவ், மதுசூதனன், சாய் வெங்கடேஷ், யாமினி, இம்மானுவேல் ராஜா உள்ளிட்டோர் தன் மூலம் தனது மனைவி சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த பணபலம் படைத்த மாஃபியா கும்பலை தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து பணம் பெற முயல்கின்றனர். இச்செயலுக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். மற்றொருபுறம் தனது மனைவியின் தற்கொலைக்கு காரணமான கும்பலும் தங்கள் பெயரை வெளியில் கூறினால் கொன்று விடுவோம் என மிரட்டுகின்றனர்.

இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி தன்னை மிரட்டி வருகின்றனர். தனது உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளது. ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும்வரை தான் உயிரோடு வாழ வேண்டும். தனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்போ அல்லது சொந்த செலவில் போலீஸ் பாதுகாப்போ வழங்க வேண்டும். உரிய பாதுகாப்பு கிடைக்கும் முன் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், தனது மனைவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தவர்கள் விவரங்களை தனது நம்பிக்கைக்கு உரிய சிலர் வெளிக்கொண்டு வருவார்கள் என அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Video: வெளிநாட்டவருடன் தகராறில் ஈடுபட்ட புதுச்சேரி பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம்..!

Last Updated : Apr 29, 2022, 2:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details