தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராசிபலன் - இன்று நல்ல நாள் - இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

horoscope-for-september-8
horoscope-for-september-8

By

Published : Sep 8, 2021, 6:02 AM IST

மேஷம்

இன்று நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் மகிழ்ச்சி உண்டாகும். இது நிதி ஆதாயம் குறித்த செய்தியாக இருக்கலாம் அல்லது நண்பர்களை சந்திக்கும் நிகழ்வாக இருக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் 100 சதவீத பங்களிப்பை கொடுப்பீர்கள். அதற்கு சிறந்த வகையில் பலன் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு கற்பனை திறன் அதிகம் இருக்கும். புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். உங்களது படைப்பாற்றல் காரணமாக உங்கள் பணியிடத்தில் உறுதிப்பாட்டுடன் பணியாற்றுவீர்கள். உங்களது புகழ் காரணமாக, எதிர்பாராத வகையிலான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உற்சாகமும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வீட்டை அலங்கரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் நீண்ட ஆலோசனைகள் காரணமாக, திறக்கப்படாமல் உள்ள விஷயங்கள் சுமுகமாக தீர்க்கப்படும்.

கடகம்

உங்கள் காதல் துணையுடன், கடைகளுக்குச் சென்று அவர்களுக்கு பிடித்த பொருள்களை வாங்குவதில் அதிக பணம் செலவு செய்வீர்கள். நீங்கள் அவர்களுக்காக அதிக பணம் செலவு செய்து அவர்கள் மனதை மகிழ்விக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொண்டு உள்ளீர்கள். பதிலுக்கு அவர்களும் உங்களது மனதை மகிழ்விக்கும் வகையில், பரிசுகளை தருவார்கள்.

சிம்மம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்த வகையில் நடக்கும் சாத்தியம் மிகவும் குறைவு. அதனால் அது குறித்து கவலைப்படாமல், நடப்பவை நல்லதற்கு தான் என்ற எண்ணத்துடன் மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்ற சரியான நபரை நீங்கள் சந்தித்து, அதன் மூலம் உங்களது கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

கன்னி

உங்களை சுற்றியுள்ளவர்கள், உங்களைப் பார்த்து வியந்து ஊக்கம் பெறுவார்கள். உங்க அறிவாற்றலும் அனைவரையும் அனுசரித்து செயல்படும் திறனும் அனைவரையும் கவரும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இன்று குடும்பத்தினருடன் நல்ல நிலையில் நேரம் செலவழிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகள் மற்றும் விஷயங்களில் உங்கள் குடும்பத்தினர் மீது அதிக கவனம் செலுத்தவும்.

துலாம்

இன்று உங்களுக்கு சாதகமான நாளல்ல என்பது குறித்து நீங்கள் மனம் வருத்தம் அடைய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. நல்லது நடக்கவில்லை என்றால் அது கெடுதல் என்று பொருள் இல்லை. சிறிது மன அழுத்தங்கள் இருந்தாலும், மாலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது உறுதி. மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

விருச்சிகம்

வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. இன்றைய தினத்தைப் பொருத்தவரை, இது அது போன்ற ஒரு நாளாக இருக்கும். வர்த்தகத்தில், போட்டி நிறைந்த நிலையில், அதைக் கையாளும் உத்திகளை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். உங்களது திறமையின் காரணமாக, சிலர் பொறாமை பட்டாலும், இது எதுவும் உங்களை பாதிக்காது. தவறுகள் மனித இயல்பு என்பதால், தவறு செய்தால் கவலை கொள்ள வேண்டாம்.

தனுசு

இன்று, வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதில் நேரம் அதிகம் செலவாகும். உங்களது பொறுமையான குணத்தினால், மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கவனமாக கேட்பீர்கள். இன்று உங்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான சாதகமான நாளாக இருக்கும்.

மகரம்

இன்று உங்களுக்குப் பொருத்தமான துணையை நீங்கள் கண்டறிந்து, அவர்களிடம் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களைப் பொறுத்தவரை உங்கள் குடும்பம் தான் உங்களது உலகம் ஆகும். கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு, நீங்கள் உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் நிபந்தனையற்ற அன்பு, பல மடங்கு உங்களை வந்து சேரும்.

கும்பம்

இன்றைய தினத்தை, உங்களுக்காக செலவிட விரும்புவீர்கள். எனினும் இது தேவையான அமைதியையும் நிம்மதியையும் கொடுக்காது. விருப்பமில்லாத நிகழ்வுகளின் காரணமாக மன வருத்தம் ஏற்படும். நீங்கள் வணங்கும் கடவுளின் மூலம் தான் உங்களுக்கு தேவையான மனோ சக்தி கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

மீனம்

இன்று, நீங்கள் வீழ்த்த இயலாத நபராக இருப்பீர்கள்! நீங்கள் பலவகையான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறனைப் பெற்று இருப்பீர்கள். உங்களது செயல் திறனை பார்த்து மற்றவர்கள் பாராட்டுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை, இன்று லாபகரமான நாளாக இருக்கும் என்பதால், ஊக்கம் பெறுவார்கள்.

ABOUT THE AUTHOR

...view details