தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Holiday for schools: தமிழ்நாட்டில் 6 மாவட்ட பள்ளிகளுக்கு நவ.19ஆம் தேதி விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு(Holiday for schools) நவ.19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rain
rain

By

Published : Nov 18, 2021, 5:03 PM IST

Updated : Nov 18, 2021, 6:04 PM IST

சென்னை:தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்குத் திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா-வட தமிழ்நாடு கடற்கரை நோக்கி வருகிறது.

இதன் காரணமாக இன்று(நவ.18) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரிப் பகுதிகளில் கனமழை (Heavy Rain) பெய்துவருகிறது.

குறிப்பாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

5 மாவட்டங்களுக்கு விடுமுறை

இந்த நிலையில் நாளையும்(நவ.19) சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு(Holiday for schools) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், அடுத்தடுத்து பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:Heavy Rain: புதுச்சேரியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பள்ளிகளில் தங்க வைப்பு

Last Updated : Nov 18, 2021, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details