தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விளையாட்டு போட்டிகள் நடத்த கோயில் நிலங்களை வாடகைக்கு விட திட்டம்! - hindu charities department announcement

கோயில் நிலங்களை விளையாட்டுப் போட்டிகள் நடத்த வாடகைக்கு விட இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

hindu charities department
இந்து சமய அறநிலையத்துறை

By

Published : Jan 3, 2022, 12:11 PM IST

சென்னை: திருக்கோயில்களுக்கு சொந்தமான காலியிடங்களை விளையாட்டுப் போட்டிகள் நடத்த வாடகைக்கு விட இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டடங்கள் வாடகைக்கு விட்டு வரும் வருமானம் மூலம் அன்னதான திட்டங்கள், குடமுழுக்கு பணி, திருக்கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறன.

அதேபோல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்திக் கொள்ளலாம் என அறிவித்து உள்ளனர்.

அதன்படி ஆறு மணி நேரத்திற்கு ரூ. 5,000 கட்டணத்திலும், 12 மணி நேரத்திற்கு ரூ. 10,000 வாடகையிலும் கட்டணம் செலுத்தி ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவது தொடர்பான ஆய்வு - சென்னைக்கு 8வது இடம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details