அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மாணவர்களின் நலனுக்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு, ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்களுக்கு, நாளொன்றுக்கு ’2 ஜிபி டேட்டா’ எல்காட் நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.