தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒன்பது மாவட்டங்களில் தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி

சென்னை:தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai highcourt
chennai highcourt

By

Published : Jun 4, 2020, 4:42 AM IST

கரோனா தொற்று பரவல் குறைவான தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களை ஜூன் ஒன்றாம் தேதி முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்நிலையில், இந்த ஐந்து மாவட்டங்களிலும் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்கும்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கைகளை அனுப்பியிருந்தனர்.

இதை பரிசீலித்த உயர்நீதிமன்ற நிர்வாகக் குழு, இந்த ஒன்பது மாவட்டங்களிலும் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறப்பதற்கான தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில், ஐந்து வழக்குரைஞர்கள் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும்.

வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது. நீதிமன்ற அறைகளில் சுகாதார நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளவும் அந்த அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details