தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

108 ஆம்புலன்ஸ் சங்கத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் - உயர் நீதிமன்றம்

சென்னை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ. 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதி மன்றம்

By

Published : Jun 8, 2019, 9:25 PM IST

2018 தீபாவளி பண்டிகையின் போது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் 930 ஆம்புலன்ஸ்களும், 41 இருசக்கர ஆம்புலன்ஸ்களும் இயக்கப்படுவதாகவும், 4,750 ஊழியர்கள் இதில் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பண்டிகை காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், சேலம் ஆத்தூரைச் சேர்ந்த செல்வராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. பிரதான வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோரது அமர்வு, தொழில் தகராறு சட்டப்படியும், தமிழக அரசின் அரசாணையின்படியும், ஆம்புலன்ஸ் சேவை, பொது பயன்பாட்டு சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாட்டு சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பேச்சுவார்த்தை நடக்கும் போது ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடியாது எனக் கூறி, போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்தது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நலச் சங்கம் ஆகியவற்றுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை 10 நாட்களில் மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details