தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விமானத்தில் ஹெராயின் கடத்தி வந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை - விமானத்தில் ஹெராயின் கடத்தி வந்தவருக்கு சிறை  தண்டனை

சென்னை: விமானத்தில் ஹெராயின் கடத்தி வந்தவருக்கு  பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

heroin smuggler punished with ten years imprisonment
விமானத்தில் ஹெராயின் கடத்தி வந்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறை

By

Published : Nov 26, 2019, 4:23 PM IST

விமானத்தில் 400 கிராம் ஹெராயின் என்கிற போதைப்பொருளை கடத்தி வந்தவருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மே மாதம் 2ஆம் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், கும்பகோணத்தைச் சேர்ந்த அப்துல் ஆதாம் சம்சுதீன் (41) என்பவர் 400 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் பிடிபட்டார்.

இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்ற கூடுதல் சிறப்பு நீதிபதி அப்துல் ஆதம் சம்சுதீனுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: 'கற்பிக்கும் முறையின் மாற்றம் கல்வித் தரத்தை உயர்த்தும்' - பின்லாந்து கல்விக் குழு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details