தமிழ்நாடு

tamil nadu

வேளாண் பல்கலையில் மூலிகை நறுமணத் தோட்டம் - திறந்து வைத்த ஆளுநர்

By

Published : Nov 1, 2021, 9:34 AM IST

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், மூலிகை நறுமணத் தோட்டம் மற்றும் கள்ளி வகை தாவரத் தொகுப்பினைத் ஆளுநர் ஆர்.என் ரவி திறந்து வைத்தார்.

ஆளுநர் ஆர்.என் ரவி, மூலிகை நறுமணத் தோட்டப் பிரிவை திறந்து வைத்தார்
கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில்

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூலிகை நறுமண தோட்டத்தைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று (அக்டோபர் 31ஆம்) தேதி திறந்து வைத்தார்.

இந்தத் தோட்டத்தில், 150 அரிய வகை மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் பராமரிக்கப் பட்டுள்ளதாக வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் 220 அரியவையான கள்ளி வகைத் தாவர தொகுப்பினையும் திறந்து வைத்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பூச்சி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

இதையும் படிங்க:'தமிழ்நாடு நாள்' அறிவிப்பு மரபு மீறிய செயல் - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details