இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் - இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'குமரிக்கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக (நவ. 14) அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை (நவ. 15) வங்கக்கடலில் நிலவும் மேலடுக்குச்சுழற்சி தமிழ்நாடு கடற்பகுதி நோக்கி நகர்வதன் காரணமாக தமிழ்நாடு, புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
நவ. 16ஆம் தேதியில் தமிழ்நாடு, புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் , கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும்; கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக (சென்டிமீட்டரில்) பரங்கிப்பேட்டை (கடலூர்) 9, கடலூர், அரிமளம் (புதுக்கோட்டை) தலா 7, கள்ளிக்குடி (மதுரை), புவனகிரி (கடலூர்) தலா 6 , நாகப்பட்டினம், சாத்தான்குளம் (தூத்துக்குடி), மதுக்கூர் (தஞ்சாவூர்), நன்னிலம் (திருவாரூர்), சிதம்பரம், காரியாபட்டி (விருதுநகர்), வானூர் (விழுப்புரம்), காரைக்கால், திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), திருச்சிராப்பள்ளி தலா 5 செ.மீ. மழை பதிவாகக் கூடும்’ எனத் தெரிவித்துள்ளது.