சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், இன்று (ஜூலை 2) சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (ஜூலை 3) சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த இரு நாள்கள்
அதேபோல் நாளை மறுதினம் (ஜூலை 4) சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதிகப்பட்ச மழை பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
வஎண் | பகுதி |
மழை அளவு
செ.மீ
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்க கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) முதல் நாளை மறுதினம் (ஜூலை 4) வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே, இந்த நாள்களில் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேபோல், அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 6ஆம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இதையும் படிங்க : பருவமழை அடுத்த வாரம் தீவிரமடையும்- இந்திய வானிலை ஆய்வு மையம்!