புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்றிரவு (டிச. 03) நிலைகொண்டிருந்தது. அது தற்போது மன்னார் வளைகுடா, ராமநாதபுரம் அருகில் தொடர்ந்து நிலைகொண்டுள்ளது.
டெல்டா, வட மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை
09:50 December 04
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரத்தில் நிலைகொண்டுள்ளதால் வட, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இதன் காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், புதுவை, கடலூர், காரைக்கால், நாகை, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
மேலும், சென்னையில் நேற்றிரவு (டிச. 03) முதல் சீரான இடைவெளியில் கனமழை பெய்துவருகின்றது என்றும் நாமக்கல், சேலம், அரியலூர் கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல்: அடித்து துவம்சம்செய்த பாஜக!