தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Heavy rain alert: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! - மழை

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

5 நாட்களுக்கு மழை
5 நாட்களுக்கு மழை

By

Published : Nov 19, 2021, 6:24 PM IST

சென்னை: நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில், இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டின் வடபகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.

இதன் காரணமாக, 19.11.2021 அன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் ஈரோடு சேலம் தர்மபுரி வேலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் வடமாவட்டங்களில் பிற இடங்களில் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், 20.11.2021 அன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பிற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21.11.2021 அன்று அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பிற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22.11.2021, 23.11.2021 அன்று தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனக் கூறினார்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் வட தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று விச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இன்று மாலை நான்கு மணி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் கன முதல் மிக கனமழை, ஓரிரு இடங்களில் அதிக மழையும் பதிவாகியுள்ளது.

அதிக மழை ஐந்து இடங்களிலும், மிக கனமழை 37 இடங்களிலும், கனமழை 66 இடங்களிலும் பதிவாகியுள்ளது. அதிகபட்ச மழை அளவாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோலியனூர், வல்லம், வளவனூர், மன பூண்டி ஆகிய பகுதிகளில் அதிக மழையாக 22 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரையைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

ABOUT THE AUTHOR

...view details