சென்னை: மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம், அமுதம் நகர், ராயப்பா நகர், பிடிசி கோட்ரஸ் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த கன மழையால் அப்பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டு தற்போது தான் மீண்டு வந்த நிலையில், மீண்டும் அப்பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து, இடுப்பளவு வெள்ள நீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
Mudichur Flood: மீண்டும் மழையில் தத்தளிக்கும் முடிச்சூர் - முடிச்சூர் வெள்ள நீர் வெளியேற்றம்
சென்னையில் முடிச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள நீர் சூந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மீண்டும் மழையில் தத்தளிக்கும் முடிச்சூர்
மீண்டும் மழையில் தத்தளிக்கும் முடிச்சூர்
இதையும் படிங்க:Tambaram Rain: வெள்ளக் காடாய் காட்சியளிக்கும் தாம்பரம்
Last Updated : Nov 27, 2021, 5:59 PM IST