சென்னை:சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதிக அளவில் பாதிக்கப்படும் இடங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை, சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ராமணியம் கௌரவ் அப்பார்ட்மெண்ட் பகுதியில் கரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் இருந்ததால் அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா அதிகமுள்ள பகுதிகளில் ராதாகிருஷ்ணன் ஆய்வு இந்தப் பகுதியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:கரோனாவுக்கு இடையே கற்பித்தல் பணி... மலைக்கிராமக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்!