சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "பொது விழாக்களிலும் வணிக வளாகத்திலும் மற்றும் மருத்துவமனைகளிலும் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை இது வருத்தமளிக்கிறது எனவே அனைத்து இடங்களிலும் தீவிரமாக கவனிக்க வேண்டும்.
மருத்துவமனை மற்றும் மருத்துவ வளாகத்தில் செவிலியர்கள் மருத்துவர்கள் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் என அனைவரும் கரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றுவதில்லை இதை முறையாக கண்காணிக்க வேண்டும்.
கரோனா, டெல்டா வைரஸ் உடன் தற்போது ஒமைக்கிரான் வேகமாக பரவுவதால் முக கவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது அடிக்கடி கை கழுவுவது போன்ற கரோனா வழிகாட்டுதலை முறையாக அமல்படுத்த வேண்டும்.
ஒமைக்கிரான் உறுதி செய்யப்பட்டவர்கள் சீராக உள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. மேலும் இந்த வைரஸ் வகை காற்றோட்டமில்லாத அறைகளிலும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது.
எட்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா பரிசோதனை
அதுமட்டுமில்லாமல் லேசான அறிகுறி இருப்பதால், இந்த வகையான வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதற்கான முன்னேற்பாடுகளை எடுப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் இருப்பினும் நமது பாதுகாப்பை நாம் கைவிட முடியாது. எங்கேனும் கிளஸ்டர் உருவாகினால் ஏற்கனவே வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வருபவர்களை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ஆர்டிபிசியல் பரிசோதனை செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் கரோனா அறிகுறி இருந்தால் எட்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
இது மட்டுமில்லாமல் வெளிநாட்டிலிருந்து வீட்டுக்கு வந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவருக்கு ஏதேனும் அறிகுறி இருந்தால் அவரையும் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
இதை அனைத்தையும் தீவிரமாக கடைபிடித்து கரோனா தடுப்பு ஊசி செலுத்தி அவர்களை செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:TNPSC Group 4: குரூப் 4 தேர்வுக்கு தமிழ் மொழி கட்டாயம்: 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைமுறைப்படுத்த கோரிக்கை