ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த செல்லப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அரசு பேருந்துகளில் (ஓட்டுநர்,நடத்துநர் உட்பட) 55+2 பயணிகளையும், மினி பேருந்தில் (ஓட்டுநர், நடத்துநர் உட்பட) 25+2 பேரும், ஷேர் ஆட்டோவில்(ஓட்டுநர் உட்பட) 5+1 மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற சாலை விதிகள் உள்ளது.
ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இரண்டு மடங்கு பயணிகள் ஏற்றப்படுவதால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக ஏற்படுவதோடு, படிக்கட்டில் பயணம் செய்யும் நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர்.