சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார். அப்போது, அதே நிறுவனத்தில் வேலைப் பார்த்துவந்த சேலையூர் ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹேமந்த்குமார் (24) என்பவருடன், அந்தப் பெண் நண்பராக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் ஹேமந்த்குமார், அந்தப் பெண்ணை காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு அந்தப் பெண் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹேமந்த்குமார், 2015ஆம் ஆண்டு அந்தப் பெண்ணை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்பு அந்தப் பெண் வீடு திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து சவுந்தரபாண்டியனார் அங்காடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹேமந்த்குமாரை கைது செய்தனர்.
காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞருக்கு ஆயுள் தண்டனை
சென்னை: காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெண்ணை கத்தியால் குத்திய வாலிபருபக்கு ஆயுள்தண்டனை
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, ஹேமந்த்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள்தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.