சென்னை: இந்தாண்டு ஹஜ் பயணம் கேரளாவிலிருந்து தொடங்க உள்ளது. பயணம் மேற்கொள்வதற்கான உணவு, இருப்பிடம் ஆகிய செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்கிறது. தகுதியின் அடிப்படையில் மொத்தம் 1,600 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்வாகியுள்ள நிலையில், நாளை (ஜூன் 12) முதல் குழு கொச்சியிலிருந்து புறப்பட உள்ளது.
ஹஜ் பயணம் 2022: தமிழ்நாட்டின் முதல் குழு நாளை புறப்படுகிறது
இந்தாண்டு தமிழ்நாட்டில் இருந்து 1,600 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், முதல் குழு கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் இருந்து நாளை (ஜூன் 12) புறப்பட உள்ளது.
ஹஜ் பயணம் தமிழ்நாட்டின் முதல் குழு நாளை புறப்படுகிறது
ஹஜ் பயணம் செய்பவர்களுக்கான வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் கண்காணிக்க உள்ளார். இந்தாண்டு தமிழ்நாடு பயணிகள் கொச்சி விமான நிலையத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. அடுத்தாண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட அனுமதி பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:திருப்பதியில் செருப்புடன் போட்டோஷூட்! மன்னிப்பு கோரினார் விக்னேஷ் சிவன்