தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிண்டியில் சட்டவிரோதமாக வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை - மூவர் கைது - - 3 people got arrested

கிண்டியில் சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்ய வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2980 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள்
மூவர் கைது

By

Published : Mar 27, 2022, 6:18 PM IST

சென்னை:சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதனால் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் தனிப்படையினர் கிண்டி பேருந்து நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் டைடல் மற்றும் நைட்ரவிட் உள்ளிட்ட உடல்வலி நிவாரண மாத்திரைகள் பெருமளவு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த மதுரவாயல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25), தி நகர் பகுதியை சேர்ந்த சதிஷ் (30), சைதாப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித்குமார் (28) ஆகிய மூவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2,000 டைடல் மாத்திரைகள், 690 நைட்ரவிட் மாத்திரைகள், 160 ரதிக் மாத்திரைகள், 130 டபால் மாத்திரைகள் என மொத்தம் 2,980 உடல்வலி நிவாரண மாத்திரைகள், மற்றும் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள்

இதையும் படிங்க:ஐஐடியில் தலித் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details