தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் ரூ.350 கோடி ஜிஎஸ்டி மோசடி: வரி ஆலோசகர் கைது - வரி ஆலோசகர் கைது

ரூ.350 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்ததற்காக வரி ஆலோசகரை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை கைதுசெய்துள்ளது.

GST Fraud Detected one arrested
GST Fraud Detected one arrested

By

Published : Feb 2, 2021, 8:01 AM IST

சென்னை:கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வரி ஆலோசகர் ஒருவரை, சென்னை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை ஜிஎஸ்டி மோசடி செய்ததற்காகக் கைதுசெய்துள்ளது.

விரிவான விசாரணைக்குப் பின்னரும், ஆதாரங்களைச் சேகரிப்பதற்காகப் பலமுறை சோதனைகள் செய்த பின்பும் அவர் கைதுசெய்யப்பட்டு, சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான நீதிபதி முன்பு முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

பிற நபர்களின் சுய ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி அவரும் அவரது கூட்டாளிகள் சிலரும் ஜிஎஸ்டி பதிவுகளைச் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி நிறுவனங்களின் ரசீதுகள் உள்பட அனைத்து ஆவணங்களையும் தயாரிப்பதற்கான வரி ஆலோசகராக இவர் செயல்பட்டுள்ளார்.

ஜிஎஸ்டி கடன் மோசடிகளுக்காகவே தொடங்கப்பட்ட இந்தப் போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன. கைதுசெய்யப்பட்டவரின் கூட்டாளிகளால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்கள் இந்தப் போலி ரசீதுகளைப் பயன்படுத்தி சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்தியுள்ளன.

இதன்மூலம், ரூ.350 கோடி ரசீது மதிப்புக்கு ரூ.64 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பலனடைந்த நிறுவனங்களையும் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை கண்டுபிடித்துள்ளது. இதில் வேறு யாருடனாவது வரி ஆலோசகருக்குத் தொடர்புள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் சென்னை அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தை நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ வரி செலுத்துவோர் 044-26142850, 26142851, 26142852, 26142853 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

ABOUT THE AUTHOR

...view details