தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2021, 6:56 AM IST

ETV Bharat / city

ஒலிப்பெருக்கிகள், செல்போன்கள் பறிமுதல்: ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறையினர் நடவடிக்கை

சென்னை: அண்ணா சாலை பகுதியில் விலைப்பட்டியல் இல்லாமல் கொண்டு வரப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள், கார் ஸ்பீக்கர்கள், செல்போன்கள்ஆகியவற்றை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

gst and excise department officials
ஒலி பெருக்கிகள், செல்போன்களை பறிமுதல் செய்யும் ஜிஎஸ்டி மற்றும் கலால் வரித்துறையினர்

சென்னையில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை அலுவலர்கள் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைத்து, தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை, அண்ணா சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்ட கள அலுவலர்கள், விலைப் பட்டியல் இல்லாமல் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள், கார் ஸ்பீக்கர்கள், பிரபல நிறுவனங்களின் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மதிப்பு 25 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அலுவலர்கள் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தபால் வாக்கு விண்ணப்பங்கள் விரைவு தபால் மூலம் அனுப்பப்படும் - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர்

ABOUT THE AUTHOR

...view details