சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், இணையதளம் மூலம் மாநகராட்சி வசூல் செய்து வருகிறது. இந்நிலையில், 2020-2021ஆம் நிதியாண்டு சொத்து வரி ரூ. 470 கோடியும், தொழில் வரி ரூ. 447 கோடியும் மாநகராட்சியால் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35 விழுக்காடு கூடுதலாக வரி வசூலாகியுள்ளது. 2021-22ஆம் நிதியாண்டு மட்டும் சொத்து வரி ரூ. 778 கோடியும், தொழில் வரி ரூ. 462 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மொத்தம் ரூ. 234 கோடி வசூலிக்க வேண்டிய வரித்தொகை நிலுவையில் உள்ளது எனவும் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் இன்னும் சொத்து வரி செலுத்தாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.