தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நியமன உத்தரவு இல்லாமல் கோயில் பணி: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு - நியமன உத்தரவு இல்லாமல் கோயில் பணி

நியமன உத்தரவு இல்லாமல் கோயில்களில் சட்டவிரோதமாக செயல் அலுவலர்களாக பணியில் உள்ளவர்களை நீக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியமன உத்தரவு இல்லாமல் கோயில் பணி
நியமன உத்தரவு இல்லாமல் கோயில் பணி

By

Published : May 22, 2022, 11:13 AM IST

சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில், முறையான நியமன உத்தரவுகள் இல்லாமல் அரசு ஊழியர்கள், செயல் அலுவலர்களாக பதவி வகித்து வருவதாகவும், சட்ட விரோதமாக செயல் அலுவலர்களாக உள்ள அவர்களை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு பரம்பரை அல்லது பரம்பரை அல்லாத அறங்காவலர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் முறையான நியமன உத்தரவு இல்லாமல் செயல்படும் செயல் அலுவலர்கள், கோயில்களின் நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளையும் நிதி சம்பந்தமான டெண்டர் உள்ளிட்ட முடிவுகளையும் எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, அறநிலையத்துறை 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை இதேபோன்ற கோரிக்கைகளுடன் தொடரப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இணைத்து பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:தக்காளியை தொடர்ந்து சதமடித்த பீன்ஸ், அவரைக்காய்!

ABOUT THE AUTHOR

...view details