தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மழைநீர் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: மழைநீர் கால்வாயில் மொபட்டுடன் தவறி விழுந்ததில் தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியை, அவரது மகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

By

Published : Dec 7, 2020, 4:45 PM IST

சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்துவந்த தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியை கரோலின் பிரசில்லா, தனது மகள் இவாலினுடன் நேற்று மாலை, தனது மொபட்டில் சூப்பர் மார்க்கெட் சென்றுள்ளார்.

தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலையில் நொளம்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி மழைநீர் கால்வாயில் விழுந்ததில், கரோலின் பிரசில்லாவும், இவாலினும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, இது குறித்து மூன்று வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி, சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

இதேபோல, காஞ்சிபுரம் களக்காட்டூர் வேளாண் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிவந்த சரண்யா என்ற மாற்றுத்திறனாளி பெண், அருகில் உள்ள குடியிருப்பில் இருந்த கழிப்பறையைப் பயன்படுத்தியபோது, தொட்டிக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.

அரசு அலுவலகமான வேளாண் துறை அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாததே சரண்யாவின் மரணத்திற்கு காரணம் எனப் பணியாளர்கள் புகார் தெரிவித்ததாகச் செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இது சம்பந்தமாக மூன்று வாரங்களில் விளக்கம் அளிக்க வேளாண் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மழைநீர் வடிகால் கால்வாயில் தவறிவிழுந்து தாய், மகள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details