தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - அரசு தேர்வுகள் இயக்குநர் - School

தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் நடக்கவிருந்த 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

By

Published : Nov 7, 2021, 7:48 PM IST

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு நிலை மாறியிருக்கிறது.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக நாளை, நாளை மறுநாள் நடக்கவிருந்த தனித்தேர்வருக்கான 8ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு என அரசுத்தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details