சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை, சோலார் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி மேற்கொண்டால் மின் பகிர்மானக் கழகத்திற்கும், விவசாயிகளுக்கும் ஏதுவாக இருக்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அந்தத் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்றும் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ”மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான விலையையும் நிர்ணயம் செய்யப்பட்டுவருகிறது.