சென்னை: அரசு சேவை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் ஜி.சுரேஷ் கூறியதாவது, "தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் 800க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பணிவரன்முறை செய்யப்படவில்லை. இதனால், முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட ஊதியத்துடன் கூடிய 365 நாள் மகப்பேறு விடுப்பு பெற முடியாமல், ஓர் ஆண்டுக்கு மேல் பணியாற்றியுள்ள பல பெண் மருத்துவர்களுக்கு விடுப்பு நிராகரிக்கப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் போது, அதன் பிறகு 5 ஆண்டுகள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் அடிப்படை ஊதியம் மட்டுமே பெற்று மக்களுக்காக மொத்தம் 7 ஆண்டுகள் சேவை செய்த போதும், முதுநிலை மற்றும் உயர் சிறப்பு படிப்புகளில் எங்களுக்கு இடஒதுக்கீடு இல்லை.