ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான பாடப்புத்தகங்கள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் தயார் செய்துள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இந்தப் பாடப் புத்தகம் விரைவில் அனுப்பப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படும். சுமார் 40 லட்சம் மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.