சென்னை:பசுமை வழிச் சாலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக 25 மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட் வழங்கப்பட்டுள்ளது. இதனை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக 'DOT' எனும் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எளிதில் எழுத்துக்களை அறிந்துக்கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பவியல் துறையில் ’State family database’ திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூகத்திற்கு பயனுள்ள மாற்றங்களை உருவாக்க இந்த திட்டம் பயன்பெறும். இ-சேவை 2.0 திட்டத்தை மேம்படுத்தப்பட்ட திட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக 76 திட்டங்களை செயல்படுத்துவதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.