தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கவுள்ளது. இதனால் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். திமுக தொண்டர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்றனர். இந்நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் என ஏராளமான அரசு அலுவலர்கள் ஸ்டாலினின் இல்லத்துக்கு சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலினை சந்திக்க விரையும் அரசு அலுவலர்கள் - இல்லத்தின் முன்பு போலீஸ் குவிப்பு!
ஏடிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ், ரவி ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அவரை சந்தித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தின் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
greet stalin
சிஎம்டிஏ துணைத் தலைவர் கார்த்திகேயன், ஏடிஜிபி சங்கர் ஜிவால், சந்திரமோகன் ஐஏஎஸ், டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ், வருண் குமார் ஐபிஎஸ், வருவாய் செயலர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அப்பல்லோ குழுமத்தின் ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தின் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Last Updated : May 2, 2021, 6:36 PM IST