சென்னை: பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கடந்த மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்பானது நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பொதுப் பயன்பாட்டிற்கு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, மீதமுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்களின் தரத்தினை உறுதிசெய்த பின்னர், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், துணை ஆணையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு கீழ்காணுமாறு தீர்வு செய்துகொள்ளலாம் என ஆணையில் கூறப்பட்டுள்ளது.
1. மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆணையாளர் ஆகியோரது விருப்பத்தின்பேரில், பொதுநல அரசு சார், அரசு சாரா அமைப்புகளில் தங்கிப் பயன் பெற்றுவரும் பொருளாதாரத்தில் நலிவுற்றப் பயனாளிகளுக்கு வழங்கலாம்.