தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாளை முதல் கோயில்கள் திறப்பு - பிரசாதம் வழங்கப்படாது என அறிவிப்பு - கோவில்கள்

சென்னை: தமிழ்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்கள் நாளை (செப்டம்பர் 1) முதல் மீண்டும் திறக்கப்படுவதையொட்டி, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

government
government

By

Published : Aug 31, 2020, 2:08 PM IST

ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் கோயில்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • பக்தர்கள் தங்களின் காலணிகளை, ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்களே வைத்து மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டும்.
  • கோயில்களில் மேற்கொள்ளப்படும் உடல் வெப்ப சோதனைக்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். உடல்நிலை சீரற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
  • கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது கைகளை சுத்தம் செய்வதுடன், பக்தர்கள் தங்களது கால்களை நன்கு கழுவ வேண்டும்.
    நாளை முதல் கோவில்கள் திறப்பு - பிரசாதம் வழங்கப்படாது என அறிவிப்பு
  • கோயிலுக்குள் நடக்கும் திருமுழுக்குகள் மற்றும் போற்றுதல்களில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.
  • கோயில்களில் பிரசாதங்கள் வழங்க அனுமதியில்லை. காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் உரிய இடைவெளியுடன் செலுத்த வேண்டும்.
  • பக்தர்கள் கோயில்களில் விழுந்து வணங்குவதற்கோ, அமருவதற்கோ அனுமதி கிடையாது.

இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய விவகாரம் - அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details