Gold Rate சென்னை:சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று(ஜூலை.04) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 819 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை, கிராம் 5 ஆயிரத்து 209 ரூபாய்க்கும், சவரன் 41 ஆயிரத்து 672 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.