சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 உயர்வு - தங்கம் விலை தற்போது
15:15 April 07
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சென்னையில் கணிசமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (ஏப்.7) ஆபரண தங்கத்தின் விலை ரூ.76 உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று ரூ. 4,258-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 4,334 என விற்கப்படுகிறது.
சவரனுக்கு ரூ.34, 064 என இருந்த தங்கத்தின் விலை ரூ.608 உயர்வு கண்டு தற்போது ரூ.34,672 என விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் ரூ. 1,600 உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ. 70,900 என விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 3,645 பேருக்கு கரோனா பாதிப்பு!